மேலும் அறிய

மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா- விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நிகழ்ச்சி

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

வேலூர் (Vellore News): பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள பாரம்பரிய நெல் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பாக, மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் ABP Nadu குழுமத்திற்கு பிரித்தேயகமாக பேட்டியளிக்கையில், "திருச்சி தனியார் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு முன்னோடி இயற்கை விவசாயிகளும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்களும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். குறிப்பாக, இந்நிகழ்ச்சி விவசாயிகளை வெறும் உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி தொழில்முனைவோராகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா- விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நிகழ்ச்சி

பாரம்பரிய நெல் விவசாயத்திற்காக பல்வேறு விருதுகளை வென்ற கேரளாவைச் சேர்ந்த முன்னோடி பெண் விவசாயி திருமதி. புவனேஸ்வரி, 120 நெல் ரகங்களை மீட்டெடுத்த தெலுங்கானா விவசாயி ஸ்ரீகாந்த், 5 ஏக்கர் நிலத்தில் 160 வகையான நெல் ரகங்களை பயிரிட்டு சாதனை படைத்த கர்நாடகா விவசாயி பி.கே. தேவராவ், பிரபல பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் ஆகியோர் நெல் விவசாயத்தில் லாபம் எடுக்கும் நுட்பங்களை விவசாயிகளுக்கு சொல்லி கொடுக்க உள்ளனர். அத்துடன் உணவு மருத்துவ நிபுணர் ஹீலர் சக்திவேல் யுவராஜ் பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் குறித்து பேச உள்ளார். மேலும், பாரம்பரிய அரிசியில் 214 பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்யும் பெண் தொழில் முனைவர் திருமதி. மேனகா, மதிப்பு கூடுதல் துறையின் சாதனை புரிந்து வரும் தான்யாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. தினேஷ் மணி ஆகியோர் மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து பேச உள்ளனர்.

மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா- விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நிகழ்ச்சி

இதுதவிர, முன்னோடி விவசாயிகள் பெரிய சாமி (கரூர்), செந்தில் குமார் (திருவாரூர்), விஜய் மகேஷ் (தஞ்சாவூர்), மஹாலட்சுமி (காஞ்சிபுரம்) உள்ளிட்டோர் தங்களுடைய வெற்றி அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும், நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இதில் இடம்பெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு விதை நெல் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!
Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!
Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
Stock Market: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Kamalhaasan:
Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!
Embed widget