நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிரிடுங்கள் - விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி டிப்ஸ்
நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஹரக்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிர் எடுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார் இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஹரக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் சாகுபடியில் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில் பயிறு வகை சாகுபடியினை அதிகரிக்க நெற்பயிரை தொடர்ந்து உளுந்து, பச்சை பயிறு போன்ற பயிர் வகை பயிர்களை சாகுபடி செய்து குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். நெல் தரிசு நிலங்களில் மகசூல் பெறவும், பயிர் சுழற்சி முறையில் உளுந்து மற்றும் பச்சைப்பயிறு போன்ற பயிறு வகைகளை சாகுபடி செய்யலாம். சம்பா மற்றும் தாளடி அறுவடைக்கு பிறகு பெரும்பாலான விவசாயிகள் கோடைகால நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் படிக்க;PM Modi Visit To TN: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..
இதேபோல் நெற்பயிரை தொடர்ச்சியாக சாகுபடி செய்வதால் மண்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மண்ணின் பிரதான ஊட்டச்சத்தான தழைச்சத்தை நிலை நிறுத்த வாய்ப்பில்லாமல் போகிறது. மேலும் நெற்பயிரினை தொடர்ந்து ஒரே நேரத்தில் சாகுபடி செய்யும் போது தண்ணீர் தேவை அதிகமாகிறது, எனவே நெற்பயிர்களை காட்டிலும் குறுகிய காலப் பயிர்களான இரண்டரை மாதம் பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் நெற் பயிருக்கு இணையான வருமானம் கிடைக்கும். பயிற்சி சுழற்சி முறையில் உளுந்து பயிரிடுவதன் மூலம் மண்ணின் தன்மை நிலைநிறுத்துவதோடு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அளவு குறையும். பயிர் வகை பயிர்களில் புரதச்சத்து நிறைந்து காணப்படுவதால் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கலாம் எனவே இயற்கை மாசுபடுதல் ஊட்டச் சத்து குறைபாடு போன்ற நிலைய மாற்றவும் பயிர் சாகுபடியில் தன்னிறைவு அடையவும், குறைந்த முதலீட்டில் நிகர லாபம் பெறவும், சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்கு அடுத்து நெல் தரிசில் உளுந்து பச்சை பயிறு வகைகளை விவசாயிகள் பயிரிட்டு பயன்பெறலாம் என இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளது.