மேலும் அறிய
Advertisement
போலி உரங்கள் விற்பனை, உர பதுக்கல் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு..
”அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் தீவிரமாக ஆய்வு செய்து போலிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.
போலி உரங்கள் விற்பனை, உர பதுக்கல் குறித்து உசிலம்பட்டியில் உள்ள உரக் கடைகளில் வேளாண்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு வேளாண்மை ஆணையர் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிகிறது., ஒவ்வொரு வட்டார அளவிலும் ஒரு குழு என ஒவ்வொரு மாவட்டத்திலும் 13 முதல் 15 வரை குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#madurai போலி உரங்கள் விற்பனை, உர பதுக்கல் குறித்து உசிலம்பட்டியில் உள்ள உரக் கடைகளில் வேளாண்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு வேளாண்மை ஆணையர் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிகிறது. @abpnadu @abplive pic.twitter.com/akUTY3piTv
— arunchinna (@arunreporter92) September 26, 2023
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் - மதுரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்பு
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் வேளாண்துறை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் சக்திகணேசன் தலைமையிலான வேளாண்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் உடக்கிடங்கு இருப்பு மற்றும் உண்மை இருப்பு, விவசாயிகள் வாங்கிய உரங்களின் உண்மைத் தன்மை, போலி உரங்கள் விற்பனை, உர பதுக்கல், விற்பனை விலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபடும் உரக்கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.,
இது குறித்து உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கூறுகையில், "உசிலம்பட்டி பகுதியில் விவசாயத்தை சவலாக தான் செய்து வருகிறோம். தண்ணீர் தட்டுப்பாட்டையும் மிஞ்சி தான் விவசாயம் செய்கிறோம். அதனால் கண்மாய்களை பொதுமக்களே தூர்வாரி நீர் ஆதாரங்களை தக்கவைக்கிறோம். இப்படி பல்வேறு சிக்கலில் விவசாயம் செய்யும் எங்களுக்கு உரங்கள் கிடைப்பதிலும் சவாலாக இருக்கிறது. இதில் போலியான உரங்கள் கிடைத்தால் விவசாயம் முழுமையாக பாதிக்கும். விவசாயம் செய்துவரும் எஞ்சிய விவசாயிகள் கூட விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்படும் எனவே.
அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் தீவிரமாக ஆய்வு செய்து போலிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் பயத்தை போக்கி விவசாயம் செய்யமுடியும்” என கேட்டுக்கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அதிமுக - பாஜக இடையே மோதல் குறித்த கேள்விக்கு ; ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும் என உதயநிதி பதில்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion