IND VS SL : முகம் சிவந்த குல்தீப் - கோபத்தில் வெளியேறிய Mickey Arthur..
இந்தியா - இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது டி-20 போட்டி, கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரிதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ரானா, சேத்தன், தேவ்தட் படிக்கல் ஆகியோர் அறிமுக வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதாக இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, டி-20 தொடரை சமன் செய்யும் முனைப்பில் இருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது முதல் இரு அணிகளும் சில தவறுகளை செய்து வந்தனர். இந்திய அணி சார்பில் கேட்ச் மிஸ் செய்வது, மிஸ் ஃபீல்ட் செய்வது என்பது தொடர்ந்தது, இலங்கை அணியை பொருத்தவரை தவறான ஷாட்களால் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், எளிதாக நடந்து முடிக்க வேண்டிய இரண்டாவது இன்னிங்ஸ், கடைசி பால் வரை பரபரப்பாக சென்றது. இலங்கை அணி சார்பாக மினோத் பனுகா மற்றும் தனஜெய் டி சில்வா ஆகியோர் மட்டும் 30+ ரன்களை எடுத்து அணிக்காக ஸ்கோர் செய்தனர். மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.