Rohit Kohli plays Duleep Trophy : ”DOMESTIC-ல ஆடுங்க” ரோகித் கோலிக்கு செக்! கம்பீர் எச்சரிக்கை
ஆனாலும் கடலை முத்து ரொம்ப ஸ்டிர்ட்க் பா என்கிற கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆனதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை இந்திய அணியில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்திய அணியில் உள்ள சீனியர் பிளேயர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் சீனியர் பிளேயர்ஸ் ஆன ரோகித் சர்மா, மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் ஆடி பல ஆண்டுகள் ஆகிறது, சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர்.
சர்வதேச போட்டிக்ளில் தொடர்ந்து ஆடி வருவதால் அவர்களால் உள்ளூர் போட்டிகளில் ஆடும் தேவை இல்லாமல் இருந்து வந்தது. இதற்கு முன்னால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோர் விராட் கோலி மற்றும் ரோகித்தை உள்ளூர் போட்டிகளில் ஆட கூறியதில்லை.
ஆனால் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள அனைத்து வீரர்களும் நடைப்பெறவுள்ள துலீப் டிராபியில் பங்கேற்க வேண்டும் என்றும் இதை வைத்து தான் இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
துலீப் டிராபியில் பங்கேற்கும் இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி ஆகிய நான்கு அணிகளுக்கான அணிகளை பிசிசிஐ தேர்வுக் குழு தேர்வு செய்யும்.
வங்கதேச அணி இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகள் ஆட உள்ளது, அதற்கு முன்பதாக அனைத்து வீரர்களும் இந்த துலீப் ட்ராபி போட்டிகளில் ஆட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கவில்லை என்றும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2005-ஆம் ஆண்டில் இதுப்போன்று சீனியர் வீரர்களான கங்குலி, ராகுல், டிராவிட், தோனி ஆகியோர் இந்திய ஏ மற்றும் இந்தியா பி அணிக்காக ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது