Spiritual concert | ஆன்மிக இசைக்கச்சேரி! அசத்திய இசைக்கலைஞர்கள்! பக்தியில் பார்வையாளர்கள்
உன்னத அர்ப்பணிப்புக்காக நடைபெற்ற தெய்வீக இசைக்கச்சேரியில் ஜெயதீர்த் மேவுண்டி மற்றும் பிரவீன் கோட்கிண்டி ஆகியோர் இசையின் மூலம் பார்வையாளர்களை ஆன்மீகத்தில் உருகச் செய்தனர்.
சென்னை மியூசிக் அகாதமியில் "ஹே கோவிந்த்" எனும் கிருஷ்ண பகவானுக்கான இசைக்கச்சேரி எய்ம் ஃபார் சேவா நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. இதில் புகழ்பெற்ற ஜெயதீர்த் மேவுண்டி, பிரவின் கோட்கிண்டி ஆகியோர், இசைக்கலைஞர்களின் குழுவோடு பங்கேற்று கச்சேரி நடத்தினர்.
எய்ம் ஃபார் சேவா 2000 ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது. இது தேசிய அளவிலான பொது தொண்டு அறக்கட்டளை. 2001 இல் நிறுவப்பட்ட முதன்மைத் திட்டமான இலவச மாணவர் விடுதிகள் ஏழை கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
ஜெயதீர்த் மேவுண்டியின் குரலில்,பிரவின் கோட்கிண்டியின் புல்லாங்குழல் இசையில், நரேந்திர எல் நாயக் ஹார்மோனியம் வாசிக்க, இந்த இசைக்கச்சேரியை கேட்டவர்கள் பக்தியில் உருகினர். இந்த "ஹே கோவிந்த்" ஆன்மீக இசைக்கச்சேரி சுவாமி தயானந்த கிருபாவை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.