Collector inspection : “ஒரு நாள் தான் Time”ஆர்டர் போட்ட கலெக்டர் ஷாக்கான மருத்துவர்கள்
“சீக்கிரம் சரி பண்ணுங்க இல்லனா சீவியர் ஆக்ஷன் எடுப்பேன் என பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரத்தில் திருச்சி எஸ் பி வருண்குமார் பள்ளி நிர்வாகத்திடம் கறார் காட்டியுள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். அப்போது 9ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையில் மாதிரி தேர்வு நடைபெற்று வருவதால் 9ம் வகுப்பு மாணவர்களை வேறொரு வகுப்பறையில் அமர வைத்துள்ளனர்.
அப்போது அந்த வகுப்பறையில் இருந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்து அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியில் பட்டு தெறித்து கீழே விழுந்தது. இதில் 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடனடியாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார், மற்றும் மாவட்ட எஸ்பி வருண்குமார், வட்டாச்சியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களை எஸ் பி வருண்குமார் நேரில் சென்று பார்த்தார். பின்னர்பள்ளியின் இரண்டாம் தளத்தில் உள்ள வகுப்புகள் அனைத்தையும் உடனடியாக சரி செய்யவில்லை என்றால் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு தொடரப்படும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.