(Source: ECI/ABP News/ABP Majha)
Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்
திருப்பதி லட்டுவில் மாட்டிறைச்சியின் கொழுப்பும், பன்றி கொழுப்பும் கலந்திருந்தாக ச்ந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசு வெளியிட்டு ஆய்வறிக்கை புயலை கிளப்பியுள்ளது.
2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில் அவர் முன்வைத்துள்ள லேடெஸ்ட் குற்றச்சாட்டு ஆந்திராவையே குலுக்கியுள்ளது.
அது தான் உலகளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பண்றி கொழுப்பு பயண்படுத்த பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் ரிப்போர்ட்.
இது கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை காயப்படுத்தி, அவர்கள் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து லேபில் நடத்தப்பட்ட டெஸ்டில், 5 லட்டுகளின் சாம்பிளில் ஆய்வு நடத்தப்பாடு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் லட்டுவில் கலக்கப்பட்ட நெய், அதனுடையை ஃபாட் கண்டெண்ட் அதாவது கொழுப்பின் அளவு எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 லட்டு சாம்பிளில், கொழுப்பின் அளவில் மாறுபாடு காட்டுகிறது. அதாவது இயற்கையாக பசும்பால் நெய்யிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பிற்கு மாறாக, வேறொரு கொழுப்பு கலக்கபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதில் சோயா பின் அவரை, சூரியகாந்தி, பாம் ஆயில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி, பன்றிக்கொழுப்பு ஆகியவை இருந்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது தான் தற்போது ஆந்திராவில் புயலை கிளப்பியுள்ளது. இதை கையிலெடுத்துள்ள சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலை கலங்கப்படுத்தி விட்டதாகவும், கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ள ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர் காங் அரசை பார்த்து வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரம் நாயுடுவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள YSR காங்கிரஸ் ”சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி, லட்டுகள் மீதான புனிதத்தை கேவலப்படுத்தி பெரும் பாவம் செய்துள்ளதாக குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
மேலும் திருமலை பிரசாதம் வழங்கும் விஷயத்தில் தானும், தன்னுடைய குடும்பமும் கடவுளின் முன் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். நாயுடுவும் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? என்று ஒய்.வி.ஆர்.சி.பி.யின் ராஜ்யசபா உறுப்பினரும், திருமலை மலைக் கோயிலை நிர்வகிக்கும் வாரியமான டிடிடியின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி சவால் விடுத்துள்ளார்.
இப்படி ஒரு பக்கம் அரசியல் ரீதியாக சலசலப்புகள் நிலவும் நிலையில், இத்தனை நாட்களாக நாம் சுவைத்த லட்டுவில் மாட்டு மற்றும் பன்றி கொழுப்பு கலந்திருந்தா இல்லையா என்று தெரியாமல் வெஜிடேரியன்ஸ் பலர் அல்லாடி வருகின்றனர்.