Vijayalakshmi Seeman Case: ”ஏழு முறை கருக்கலைப்பு பணம் பெற்ற சீமான்” குட்டு வைத்த நீதிமன்றம்
பாலியல் புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றிருப்பது மிரட்டலின் அடிப்படையில் தான் என்பது தெளிவாக தெரிகிறது, அதனால் சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சீமானுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் இந்த வழக்கில் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தார் நடிகை விஜயலட்சுமி. ஆனால் அந்த புகாரை 2012 ஆம் ஆண்டில் திரும்பி பெறுவதாக சொன்னார். இதானால் இந்த புகாரை போலீசாரும் முடித்து வைத்தனர். இச்சூழலில் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதி மன்றம்.
இதனிடையே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானோ புகாரை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து சீமானுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
அதாவது, நடிகை விஜய லட்சுமிக்கு சீமான் மீது காதல் எல்லாம் இல்லை. பல்வேறு பிரச்சனைகள் காரணமாகத்தான் விஜயலட்சுமி குடும்பத்தினர் சீமானை அனுகி உள்ளனர். சீமான் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உறவு வைத்துள்ளார்.அதேபோல் சட்டப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார். சீமானுன் வற்புறுத்தலால் ஏழு முறை கரு கலைப்பும் விஜயலட்சுமி செய்திருக்கிறார். அதேபோல் அவ்ரிடம் இருந்து பெரும் தொகையையும் சீமான் பெற்றுள்ளார்.
அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக விஜயலட்சுமி கூறியுள்ளார்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், “ பாலியல் வன்கொடுமை புகார் மிகவும் தீவிரமானது என்பதால் அந்த புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. சீமான் மீது விஜயலட்சுமி சொன்ன புகார் அவரது வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது. எனவே சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதி மன்றம் கூறியுள்ளதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் இருக்கிறாரம் சீமான்





















