TamilNadu Day 2024 : தமிழ்நாடு நாள்.. அண்ணா பேசியது என்ன? ஸ்டாலினின் குட்டி வீடியோ
தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு பெயர்மாற்ற விழாவில் அண்ணா பேசியது என்ன தெரியுமா? என்று ஒரு குட்டி வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஜூலை 18ஆம் தேதியான இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குட்டி வாழ்த்து வீடியோவை பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில் தமிழ்நாடு பெயர்மாற்ற விழாவில் அறிஞர் அண்ணா பேசியது இடம்பெற்றுள்ளது. அண்ணா பேசுகையில், “தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றம் என்பதைவிட இந்த பெயரை பெற்றிருப்பது என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றப்பட்ட பெயரை நாம் திரும்ப பெற்றிருக்கிறோம். இந்த அரசு வந்தபிறகுதான் இந்த பெயர் பெறப்பட வேண்டும் என்று வரலாற்றில் இருந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன்” என கூறியுள்ளார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” என முடிக்கிறார்.
ஜூலை 18ஆம் தேதியான இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.