மேலும் அறிய

ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?

பசும்பொன்னில் செங்கோட்டையன் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றாக ரோட்ஷோ நடத்தில் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய நிலையில், தற்போது சேலத்தில் ஈபிஎஸ் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கோட்டையன்,ஓ,பன்னீர்செல்வம்,டிடிவி் தினரகன் உள்ளோட்டோர் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து இருந்தார். அதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி அதிரடி காட்டினார் ஈபிஎஸ். அதோடு செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் அடுத்தடுத்து நீக்கினார். 

இந்நிலையில் நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் வந்தது பேசுபொருளானது. மேலும் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய மூவரும் இணைந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் எங்கள் அணியில் செங்கோட்டையன் இணைந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார் டிடிவி. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பேசிய ஈபிஎஸ், “கட்சிக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தயக்கம் காட்டப்போவதில்லை.செங்கோட்டையன் திமுகவின் பி டீம் எனவும், அவர் ஒரு துரோகி எனவும் அவரால் தான் 2021 தேர்தலில் அதிமுக தோல்வியுற்றதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் செங்கோட்டையன் நீக்கமா என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

மேலும் செங்கோட்டையனோ அதிமுகவில் இருந்து நீக்கினால்
சந்தோஷப்படுவேன் என கூறி பரபரப்பை கூட்டினார். இந்நிலையில் ஈபிஎஸ் என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இச்சூழலில் தான் இன்று சேலம் ஓமலூரில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பணிகள் குறித்து அவர் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் குறித்து ஒரு முடிவு எடுப்பாரா ஈபிஎஸ் என்ற கேள்வி வலுத்துள்ளது. 

அதே சமயத்தில் நெல்லை பாஜக அலுவலகத்தில் பாஜக தலைவர் நயினார் நாகெந்திரனுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் நயினார் ஆலோசனை மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் இன்று மழை பெய்யுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு வானிலை நிலவரம் இதோ!
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் இன்று மழை பெய்யுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு வானிலை நிலவரம் இதோ!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
TN Govt: மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Embed widget