வெடித்து சிதறிய சிலிண்டர்கள் தீக்கிரையான டிப்பர் லாரி பரபரக்கும் அரியலூர் பகீர் வீடியோ | Ariyalur Gas Cylinder Lorry Blast
அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து சிதறும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானது. பலத்த சத்தத்துடன் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த லாரி முற்றிலுமாக எரிந்து கருகிறது.
கரும்புகை, மற்றும் சிலின்டர்கள் வெடிக்கும் சத்தம் பல மைல் தூரம் வரை கணீர் என ஒலித்தது. இந்நிலையில் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் கனகராஜ் அதிர்ஷ்டவசமாக குதித்து உயிர் தப்பினார். தலையில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய கனகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரி திடீரென விபத்துக்குள்ளான கோர காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.