IPS Sylendra Babu Speech : “நம்மைக் கண்டால் நடுங்க வேண்டும்” காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவிட்ட சைலேந்திரபாபு
IPS Sylendra Babu Speech : ரவுடிகள் மற்றும் கூலிப் படைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணிக்கை மற்றும் 12,819 கவுன்சிலர்கள் பதவிப் பிரமாணம் செய்தல் என நகர்ப்புற தேர்தல் அனைத்தும் அசம்பாவிதங்களின்றி சிறப்பாக நடந்து முடிந்தன. சிறிய பிரச்சினைகள் எழுந்தபோது, அவற்றை தைரியமாகவும், சமயோஜிதமாகவும் காவல்துறை எதிர்கொண்டது. இதற்காக இரவும் பகலும் அயராது பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.





















