Roja Selfie Controversy : ”நான் அப்படி செய்யல” தூய்மை பணியாளர் சர்ச்சை கொந்தளித்த ரோஜா
தன்னுடன் ஆசையாய் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்த தூய்மை பணியாளர் பெண்ணை நடிகை ரோஜா கொஞ்சம் தள்ளியே நில்லுங்க எனக்கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை ரோஜா விளக்கமளித்துள்ளார்.
நடிகையும் ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் வந்திருந்தார்
அப்போது ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசையாய் ஓடிவந்த தூய்மை பணியாளர் பெண்மனி ஒருவரை தள்ளியே நிக்குமாறு ரோஜா கூறி புகைப்பட, எடுத்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையில் ‘இது குறித்து நடிகை ரோஜா வருத்தம் தெரிவித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் , நானும் எனது கணவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தோம்.
தரிசனம் செய்துவிட்டு வரும் போது நிறைய மக்கள் எங்களோடு செல்பி எடுத்துக்கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த தூய்மை பணியாளர்கள் எங்களுடன் செல்பி எடுக்க வேகமாக ஓடி வந்தனர், அவர்கள் கீழே விழுந்து விடக்கூடாது என்பதறகாக பொறுமையா வாங்க என்று சைகை தான் காட்டினேன், அதை சிலர் தவறாக புரிந்து கொண்டு அவர்களை நான் தள்ளி நில்லுங்கள், என்னை தொடக்கூடாது என்று நான் சொன்னதாக கூறி தவறாக சித்தரித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்களின் வேலை என்பது உயர்வானது, அவர்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது, என் மீது காழ்புணர்ச்சியோடு சிலர் வேண்டுமென்றே இவ்வாறு சித்தரிப்பது எனக்கு மிகுந்த வருத்தை அளிக்கிறது என்று நடிகை ரோஜா அந்த விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.





















