மேலும் அறிய

Waqf bill in parliament | முஸ்லிம் அதிகாரம் பறிப்பு?”பாஜகவின் சதித்திட்டம்” எதிர்க்கட்சிகள் கண்டனம்

சொத்துக்கள் மீதான வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பேசப்படுவது விமர்சனத்தில் சிக்கியுள்ளது. இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக எதிர்ப்பு குரல் எழ ஆரம்பித்துள்ளது.

வக்பு என்பது இஸ்லாமியர் ஒருவரால் பொது நோக்கத்திற்காக தானமாக வழங்கப்படும் சொத்து. இந்திய சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் இஸ்லாமிய மன்னர்கள், செல்வந்தர்கள் என பலரும் தானமாக வழங்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இப்போது வக்பு வாரியத்தின் வசம் உள்ளது. இதனை கொண்டு நாடு முழுவதும் மதராசாக்கள், பள்ளிவாசல், பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டு நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. மேலும் முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் இவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் 4847 சொத்துக்கள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

வக்பு சட்டம், 1954 வக்பு நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும். அதாவது குறிப்பிட்ட சில சொத்துக்களை வைத்திருப்பது மற்றும் குறிப்பிட்ட பொதுநலன் வரம்புக்குட்பட்ட நன்மைக்காக அதைப் பாதுகாத்தல் மற்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்குப் புறம்பாக அதைப் பயன்படுத்துவதையோ அல்லது அகற்றுவதையோ தடை செய்தல் போன்ற காரணங்களுக்கான அமைப்பாக செயல்படுகிறது.

இந்த அதிகாரங்கள் காரணமாக, வக்பு வாரியங்கள் இப்போது இந்திய ஆயுதப் படை மற்றும் ரயில்வேக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நில உரிமையாளராக உள்ளது. அவர்களின் நிலத்தின் பங்கு 2009 இல் இருந்து இரட்டிப்பாகியுள்ளது. வக்பு சட்டம், 1995 இன் பிரிவு 40-ல் பொறிக்கப்பட்டுள்ள செயல்படுத்தும் விதிகள். வக்ஃபுக்குச் சொந்தமானது என்று நம்புவதற்குக் காரணங்களைக் கொண்ட சொத்தின் உரிமையைப் பெறுவதற்கும், அறிவிப்புகளை வெளியிடுவதற்கும் அல்லது விசாரணை நடத்துவதற்கு வாரியத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது. சுதந்திரமான விசாரணையை நடத்தி, சர்ச்சைக்குரிய சொத்தின் உரிமை குறித்து ஒரு முடிவுக்கு வர வாரியம் அனுமதிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சொத்துக்கள் மீதான வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான, புதிய மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இது இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக எதிர்ப்பு குரல் எழ ஆரம்பித்துள்ளது. 

வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பான மசோதா, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தவொரு நிலத்தையும் தனது சொந்தச் சொத்தாக அறிவிக்கக் கூடும் என்ற வக்பு வாரியங்களின் அதிகாரத்தை திருத்துவது உட்பட, வக்பு சட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ள பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் மூலம், அனைத்து வருவாயிலும் வெளிப்படைத்தன்மை வரும் என்று ஆளும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த மசோதா வக்பு சட்டத்தில் சுமார் 40 திருத்தங்களை முன்மொழிய வாய்ப்புள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வக்பு வாரியத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, வக்பு வாரியங்களை மறுசீரமைத்தல், அமைப்பை மாற்றுதல் மற்றும் வாரியம் வக்பு சொத்து என அறிவிக்கும் முன் நிலத்தை சரிபார்ப்பதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும். மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் அமைப்பை மாற்றவும், அதில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் வழிவகை செய்யும் வக்பு சட்டத்தின் பிரிவு 9 மற்றும் பிரிவு 14 ஐ அமல்படுத்தவும் திருத்த மசோதா முன்மொழிகிறது என கூறப்படுகிறது. ஜூன் 2023ம் ஆண்டு, தேசிய தலைநகரில் உள்ள 123 சொத்துக்கள் சட்டத்திற்குப் புறம்பாக, வக்பு வாரிய சொத்துக்களாக உரிமை கோரப்பட்டது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

இந்த சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பை வழங்குவதை விட்டுவிட்டு, அவர்களின் உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. அம்ரா ராம் கூறியுள்ளார். மேலும் அரசின் தவறான நோக்கத்தை இந்த சட்டத்திருத்தம் காட்டுவதாக கூறியுள்ள IUMLன் மக்களவை உறுப்பினர் E T Mohammed Basheer கூறியுள்ளார். மேலும் இச்சட்டங்கள் மூலம் வக்ஃப்க்கு சொந்தமான சொத்துகளை அரசு எடுத்துக்கொள்ள நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த சூழலில் தான், வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?
RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget