Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்
’’என் பையன் தாய்ப்பாசத்துல தான் இப்படி பண்ணிட்டான்..அந்த டாக்டர் எனக்கு சரியாவே ட்ரீட்மெண்ட் பாக்கல..என்ன ஒரு வழி ஆக்கிட்டாரு..’’ என அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரின் தாய் பிரேமா கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மருத்துவர் பாலாஜியை இன்று விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விக்னேஷ் ஏன் இப்படி செய்தார்..அவருக்கு அந்த மருத்துவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது குறித்து விக்னேஷின் தாய் பிரேமா தெரிவித்துள்ளார்.
நான் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர் பாலாஜிதான் எனக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை காலத்தின் போது பாலாஜி எனக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை, எனது முகத்தை கூட பார்க்காமல் பக்கத்து பெட்டில் நின்று கொண்டே உனக்கு கீமோ வேணாம்மா அப்டினு சொல்லிட்டு போயிடுவார். எனக்கு 5 வது ஸ்டேஜ் கேன்சர் என தற்போது பொரலியை கிளப்புகிறார். ஆனால் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் எனகு 2 வது ஸ்டேஜ் தான் சீக்கிரம் குணப்படுத்திடலாம்னு சொன்னாங்க. ஆனா பண வசதி இல்லாதனால் அங்க ட்ரீட்மெண்ட் பாக்காம கவர்மெண்ட்ல பாத்தோம். ஆனா இங்க எனக்கு முறையான சிகிச்சை அளிக்கல. இதுனால நாளுக்கு நாள் என் நிலைமை மோசமாயிடுச்சு. எனக்கு மூனும் ப்சங்க தான். நேத்து உடம்பு ரொம்ப முடியாம போய் துணி மாத்த கூட உதவிக்கு ஆள் இல்லாம என் பையனதான் கூப்டேன். அந்த வேதனை தாங்காம தான் அவன் இப்படி பண்ணிட்டான். தாய்ப்பாசம் தான் ரொம்ப நல்ல பையன் பாசக்காரன்..அவங்க அப்பாவும் இறந்துட்டாரு நான் மட்டும்தான் அவங்களுக்கு இருக்கேன்..
டாக்டர் பாலாஜியை ஹாஸ்பிட்டல் விட்டு மாத்தக்கூட வேணாம் இனிமே நல்லா ட்ரீட்மெண்ட் பாக்கட்டும் அவளோதான்’’ என ஆக்ஸிஜன் டியூபுடன் மூச்சுவாங்கிக்கொண்டே கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார் விக்னேஷின் தாய் பிரேமா.