VCK Ravikumar on DMK | ”திமுகவும் பாஜகவும் ஒன்னு” போட்டுத் தாக்கும் விசிக! தமிழ் கல்வியில் காவியா?”
கல்வியை காவி மயமாக்கும் வகையில் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் இருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக விசிக எம்பி ரவிக்குமார் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டு நாட்களாக நடந்தது . இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டுனர்.
இந்த நிலையில் இந்த மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள சிலதீர்மானங்கள் கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது போல் இருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் விமர்ச்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்றும் இன்றும் (24-25) நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள்,
5 ஆவது தீர்மானமாக : “ முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்;
8 ஆவது தீர்மானமாக : “ விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் ;
12 ஆவது தீர்மானமாக : “ முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல.
இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது. என்று பதிவிட்டுள்ளார்.
திமுகவின் கூட்டணி கட்சியான விசிக தரப்பில் இருந்து இப்படி ஒரு கண்டனம் எழுந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை எற்ப்படுத்தியுள்ளது.