Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்
துணை முதல்வரின் செயலாளர் யார் என்பதில் அதிகாரிகள் இடையே கடும் போட்டி இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு ஒரு ஐஏஎஸ்-ன் பெயர் அடிபட்டு வந்த நிலையில், தற்போது அமுதா ஐஏஎஸ் இந்த ரேஸில் முந்துவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்தது துணை முதல்வர் பதவி. இறுதியில் பரபரப்பான பேச்சுக்கு மத்தியில் துணை முதல்வராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இது பதவியல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார் உதயநிதி. முதலமைச்சரான தனக்கு துணையாக இல்லாமல், நாட்டு மக்களுக்கு துணையாக உதயநிதி இருக்கப் போகிறார் என்று சொன்னார் முதலமைச்சர் ஸ்டாலின்.
துணை முதல்வர் பதவியை தொடர்ந்து அடுத்து பேசுபொருளாக மாறியுள்ளது, துணை முதல்வர் உதயநிதியின் செயலாளர் யார் என்பது. யாருக்கு அந்த பொறுப்பு என்பதில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே போட்டி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ரேஸில், தமிழக தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர் சாய்குமார் ஐஏஎஸ், உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ், விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ்-ஏ துணை முதல்வரின் செயலாளர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பேச்சு அடிபட்டது. விளையாட்டுத்துறை செயலாளரையே இங்கும் போடலாம் என சிலர் கருத்து சொன்னதாகவும், ஆனால் அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒத்துவரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமுதா ஐஏஎஸ்-க்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருவதாக சொல்கின்றனர். உள்துறை செயலாளர் பொறுப்பில் இருந்த அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக மாற்றபட்டார். இதனை தொடர்ந்து மக்களின் முகவரி, மக்களுடன் முதல்வர் மற்றும் பிற பொதுமக்கள் குறை தீர்ப்பு திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக அமுதாவை நியமித்து அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டாலின். அதனால் துணை முதல்வரின் செயலாளர் என்ற முக்கிய பொறுப்புக்கு அவரை நியமிக்கலாமா என்ற பேச்சும் ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.