Subramanian Swamy | சிக்கலில் ராகுல்?நெருக்கும் சு.சுவாமி..பரபரக்கும் டெல்லி அரசியல்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரிய தனது மனு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளர். 5 ஆண்டுகள் ஆகிய போதிலும் சுப்பிரமணியன் சுவாமி இதை கையில் எடுத்துள்ளது பகீர் கிளப்பியுள்ளது.
2005 அக்டோபர் 10 மற்றும் 2006 அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் பிரிட்டன் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர அறிக்கையில், ராகுல் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2009-ல் வெளியிடப்பட்டபோதும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக ராகுல் காந்தியின் பெயர் மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அயல்நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர் இந்திய குடிமகனாக கருதப்படமாட்டார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
அந்த மனுவில், பிரிட்டன் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தவராகும் வருமான கணக்கு தாக்கல் செய்த 2005 - 2006 ஆண்டுகள் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என தெரிவித்திருக்கிறார் என்று சுப்ரமணிய சுவாமி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்ட ஒன்பதாவது பிரிவை மீறுவதாகும் என சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக 14 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு 2019 ஏப்ரலில் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.
இதற்கிடையில், ராகுல்காந்தி இந்திய குடிமகனாக இல்லாத நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமேதியிலும் வயநாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். எனவே உச்ச நீதிமன்றம் இதில் தலையிட கோரி இரு தனி நபர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏதோ ஒரு நிறுவனம் ஒருவர் பிரிட்டன் குடிமகன் என்று கூறினால் அதற்காக அவரை பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக கருத முடியாது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த குற்றச்சாட்டு செல்லாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தநிலையில் 5 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இதுவரை உள்துறை அமைச்சகம் ராகுல் காந்தி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இப்போது சுப்பிரமணியன் சுவாமியின் புகாராகும். நமது நாட்டின் சட்டம் ஒரு நபர் இரண்டு குடியுரிமை பெற்று இருப்பதைத் தடை செய்கிறது. இதன் காரணமாகவே ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க உள் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு சுப்பிரமணியன் சுவாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
ராகுல் காந்தி குடியுரிமையை ரத்து செய்வதன் தொடர்பாகவும் தான் எழுதிய கடிதம் தொடர்பாகவும் முடிவு எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார் இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.