Savukku Shankar | "பொய் வழக்கு போடுறீங்களே"கள்ளச்சாராயம் தடுக்க முடியல! சவுக்கு சங்கர் ஆவேசம்!
"பொய் வழக்கு போடுறீங்களே"கள்ளச்சாராயம் தடுக்க முடியல! சவுக்கு சங்கர் ஆவேசம்!
நீதிமன்றத்திற்கு வந்த சவுக்கு சங்கர், கள்ளாச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஐ எட்டியுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் பலரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அரசியல் கட்சியினர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.
இந்தநிலையில் பெண் காவலர்களை இழிவாக பேசியது, கஞ்சா வழக்கு உள்ளிட்டவற்றில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சவுக்கு சங்கர் இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு போலீசார் சவுக்கு சங்கரை அழைத்து சென்றனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் தமிழக அரசுக்கு எதிராக சவுக்கு சங்கர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.