மேலும் அறிய

One Nation One Election: ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLAN

‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக  கூறப்படுகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை ஒரே காலத்தில் நடத்த வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசின் அதிகாரம் முன்பு இல்லாதா அளவிற்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தாலோ அல்லது வேறு காரணங்களால் ஆட்சி நடத்த முடியாத சூழல் உருவாகினாலோ மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை காத்திருக்க வேண்டும்.  அதுவரை அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தான் நடைபெறும். 

இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ இதை எல்லாம் காதில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த சட்டம் குறித்து கருத்துக்களை பெறுவதற்காகவும், அதை ஆய்வு செய்து தொகுத்து வழங்குவதற்காகவும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழு தனது விவரங்களை மத்திய அரசு முன்னிலையைில் தாக்கல் செய்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது இருக்கும் ஒரே வேலை, அனைத்து மாநில அரசுகளையும் சமாதானப்படுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். ஏனெனில் இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியலமைப்பு சட்டத்தில் 6 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தங்களை செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு பலம் மத்திய அரசுக்கு வேண்டும். தற்போது மத்திய அரசின் கூட்டணி பெரும்பான்மையோடு இருந்தாலும், இந்த பலத்துடன் இல்லை.

அதாவது மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் 292 பேர் பாஜக கூட்டணியில் உள்ளனர். ஆனால் 3ல் 2 பங்கு பலத்தை பெற 364 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். மாநிலங்களவையில் 245 எம்பிக்களில் 112பேர் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் இது போதாது. 3ல் 2 பங்கு பலம் வேண்டும் எனில் குறைந்தபட்சம் 164 எம்பிக்களின் ஆதரவு தேவை. எனவேதான் அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் இந்த மசோதா அடுத்த வாரம் தாக்கல் ஆக இருக்கிறது. இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. அதே நேரம் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget