Nitish Kumar Controversy : "நீ ஒரு பெண்.. உட்காரு" உனக்கு என்ன தெரியும்? சர்ச்சையில் நிதிஷ்குமார்!
நீங்க ஒரு பெண்.. உங்களுக்கு ஒன்றும் தெரியாது.. உட்காருங்கள் என முதலமைச்சர் நிதிஷ் குமார் பீகார் சட்டப்பேரவையில் பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பெண் எம்.எல்.ஏ வை மறியாதை குறைவாக பேசிய நிதிஷ் குமாருக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாக்கள் கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, ஐ என் டி ஐ ஏ கூட்டணியிலிருந்து வெளியேறி தற்போது பாஜக ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருகிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
இந்நிலையில் பீகார் சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது, அதில் தொடர் கேள்வி தொடர் அமளி என எதிர்க்கட்சிகள் நிதீஷ் குமாரை திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக இட ஒதுக்கீடு விவகாரம், பீகாரருக்கு சிறப்பு அந்தஸ்து ஆகிய விவகாரங்களில் நித்திஷ் குமார் தோல்வி அடைந்து விட்டதாக பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் முழங்கி வருகின்றன.
இந்நிலையில் பீகார் சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ்குமார், இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சில நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பேசி கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சியினர் தொடர் அமலியில் ஈடுபட்டனர்
அதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்எல்ஏவான ரேகா பஸ்வான், நிதீஷ் குமாரை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்..
இதனால் கோபம் அடைந்த நித்திஷ், 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு எனது அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது, அதன் காரணமாகவே இன்று உங்களால் இவ்வளவு பேச முடிகிறது, அனைத்து கட்சியையும் ஒருங்கிணைத்து இட ஒதுக்கீடு வேலைகளை செய்தோம், நீங்கள் ஒரு பெண் உங்களுக்கு எதுவும் தெரியாது உட்கார்ந்த அமைதியாக கேளுங்கள்
நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு தான் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. என்று ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது என்று நிதீஷ் குமார் பீகார் சட்டப்பேரவையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலர் இதை விமர்சித்து வரும் நிலையில், பீகார் முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான தேஜாஸ்ரீ யாதவ் நித்திஷ்குமாரின் பேச்சை தரம் தாழ்ந்தது என விமர்சித்துள்ளார்..