Modi vs Nitin Gadkari : ”நாட்டில் நல்ல தலைவருக்கு பஞ்சம்!”மோடியை சாடிய நிதின் கட்காரி?
”நாட்டில் நல்ல தலைவருக்கு பஞ்சம்!”மோடியை சாடிய நிதின் கட்காரி?
இந்தியாவில் பணத்துக்கு பஞ்சமில்லை, ஆனால் மக்களுக்காக உழைக்கும் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் உள்ளது என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ள கருத்து, மறைமுகமாக மோடியை தாக்கினாரா நிதின் கட்காரி என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மோடி தான் பாஜகவின் முகம், மோடி தான் அனைத்துமே என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டாலும்.. அதிலிருந்து சற்றே விலகி, மோடியின் புகழ் பாடாமல்.. தன்னுடைய நடவடிக்கைகளால் தனக்கென ஒரு பிம்பத்தை கட்டமைத்து வைத்துள்ளவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. ஆனால் அதுவே இவர் மீது விமர்சனங்கள் எழ பல நேரங்களில் காரணமாக அமைவதுண்டு. மோடியிடம் ஆலோசிக்காமால் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்ற குமுறல்கள் அவ்வப்போது எழுவதுண்டு.
ஆனால் இந்திய சாலை போக்குவரத்தை மேன்படுத்தியதிலும், நெடுஞ்சாலை துறை திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதிலும் இவருக்கு நிகர் இவரே என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஆனால் மோடிக்கும் நிதின் கட்காரிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை, தன்னக்கு நிகராக கட்சியில் இன்னோருவர் வளர்வதை மோடி விரும்பவில்லை அதனால் திறமையான அமைச்சராக இருந்தும் நிதின் கட்காரி புறகணிக்க்படுகிறார் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
உதாரணமாக அண்மையில் கூட நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக தங்களுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது, அப்போது அதில் 195 பாஜக வேட்பாளர்களிடன் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. ஆனால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரின் பெயர் இடம்பெறவில்லை. இதை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள், நிதின் கட்கரி, மோடி இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. அதனால் தான் நிதின் கட்கரியின் பெயரை மோடி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அதன் பின்னர் நாக்பூர் வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நிதின் கட்கரி பேசியதாக தகவல்கள் வெளியானது. அடுத்த சில நாட்களிலேயே அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலில் நிதின் கட்கரியின் பெயர் அறிவிக்கபட்டது, இந்நிலையில் தான் மோடி, நிதின் கட்கரி இடையே தொடர்ந்து உரசல் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மோடியை சீண்டும் விதமாக நாட்டில் நல்ல தலைவர்கள் குறைவாக உள்ளதாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் அவர்.
சண்டிகாரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி "நம் நாட்டில் பணம் குறைவாக இல்லை என நான் நம்புகிறேன். ஆனால் நாட்டுக்காக நேர்மையாக உழைக்கும் தலைவர்கள் குறைவாக இருக்கிறார்கள். 1995-2000-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது. அப்போது நான் மும்பையில் அமைச்சராக இருந்தேன், நீங்கள் எப்போதாவது மும்பைக்கு சென்றால், வொர்லி-பாந்த்ரா இடையேயான கடல் இணைப்பு வழி தடம் உள்ளது, அதை திட்டத்தை கட்டமைத்த பெருமை எனக்கு உண்டு. அதே நேரம் மும்பை, புனே இடையேயான நாட்டின் முதல் அதி விரைவுச்சாலையை உருவாக்கியது நான் தான். முதன் முறையாக 600 கோடி ரூபாயுடன் சந்தைக்குச் சென்றோம், ஆனால் எங்களுக்கு 1150 கோடி ரூபாய் கிடைத்தது, அந்த அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு விஷயத்தை தான், அது தான் நம் நாட்டில் பணத்துக்குப் பஞ்சம் இல்லை என்று..." அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியுள்ளாரா அமைச்சர் நிதின் கட்காரி என்ற சலசலப்பு எழுந்துள்ளது.