Nirmala Sitharaman | "மனசு வலிக்குது சார்..”அல்வா பத்தி பேசாதீங்க ராகுல்! துவைத்தெடுத்த நிர்மலா!
சார் கடைசியா அந்த அல்வா.. அதை பத்தி பேசுறேன்..
சார் இது எனக்கு ரொம்ப வலிக்குது..
அல்வா கிண்டும் நிகழ்வு ஏன் நடைபெறுகிறது என்று தெரிந்தவர்கள் அப்படி பேச மாட்டார்கள்
இது ஒரு பாரம்பரியமான முக்கிய நிகழ்வு
நம் நாட்டில் ஒரு வழக்கமுண்டு..
எந்த நல்ல விஷயத்தையும் இனிப்புடன் துவங்குவது..
"இத்தாலியில் இதெல்லாம் நடக்காது" - சோனியாவை தாக்கிய பாஜக எம்பிக்கள்
பட்ஜெட் தயாரிக்கும் அறைக்கு வந்த பின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகள் வெளியே செல்ல முடியாது
ஐந்து இரவு, நான்கு நாட்கள் அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்கு செல்லாமல் இரவு பகலாக இந்த பட்ஜெட்டை உருவாக்கினார்கள்
பட்ஜெட் உருவாக்கப்படுவதற்கு முன்பு இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெறும்
பேசிக் கொண்டிருந்த நிர்மலா.. கோஷமிட தொடங்கிய I.N.D.I.A..
எங்கே தாக்கப்பட்டு விடுவார்களோ என்று எதிர்க்கட்சியினர் பயந்து போய் இருக்கிறார்கள்..
அல்வா கிண்டுவது எப்போது புகைப்பட கண்காட்சியாக மாறியது?
வழக்கமாக அதிகாரிகள் தான் அல்வா கிண்டுவார்கள்..
ஆனால் 2013-14ல் தான் மத்திய அமைச்சர் முதல் முறையாக கீழே சென்று அல்வா கிண்டினார்
அங்கிருந்து தான் இது தொடங்கியது..
அதற்கு முன் Ordinance-ஐ கிழித்து எறிந்தார்கள்..
நிர்மலா சீதாராமன் தன்னை குறிப்பிடுவதை அறிந்து சிரித்த ராகுல் காந்தி
பவரில் தானே இருந்தீர்கள்.. அல்வா கிண்டும் நிகழ்வை ரத்து செய்து இருக்கலாமே
அல்வா கிண்ட போன அமைச்சர், இங்கே எத்தனை SC, ST அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று கேட்க வேண்டியது தானே?
கேட்டீர்களா? ஏன் இல்லை?
அதிகாரிகளின் சாதி என்ன என்று அமைச்சர் அன்று கேட்கவில்லை..
ஆனால் இன்று அதிகாரிகளின் சாதியை கேட்கிறார்கள்..
மக்களை சாதி அடிப்படையில் பிரிக்க இவர்கள் முயல்கிறார்கள்..
இது ஒரு அவமானகரமான செயல்..
பட்ஜெட் தயாரிக்கும் போது அதிகாரிகள் அறையை விட்டு வெளியே வரக்கூடாது
பட்ஜெட் தயாரிக்கும் போது, ஒரு அதிகாரியின் தந்தை இறந்துவிட்டார்.. ஆனால் அந்த அதிகாரி வீட்டுக்கு செல்லவில்லை..
பட்ஜெட் தாக்கல் ஆகும் வரை பொறுமையாக காத்திருந்தார்..
அவருக்கு நான் தலை வணங்குகிறேன்..
இந்த அல்வா கிண்டும் நிகழ்வு என்பது உணர்ச்சி பூர்வமானது..
தன்னுடைய மகன் இறந்ததற்கு கூட செல்லாமல் ஒரு அதிகாரி பணியாற்றினார்..
தயவுசெய்து அவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்..
அவர்களை தாழ்த்தி பேசுவது நல்ல விஷயம் கிடையாது..