NDA Alliance | NDA கூட்டணியில் வைகோ? கதவை தட்டும் பாஜக! முட்டுக்கட்டை போடும் துரைவைகோ
திமுக கூட்டணியில் இருக்கும் வைகோவை அதிமுக - பாஜக கூட்டணிக்கு இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ஆனால் இதற்கு துரை வைகோ முட்டுக்கட்டை போடுவதாகவும் சொல்கின்றனர்.
அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழக கட்சிகள் இப்போதே தீவிர படித்தியுள்ளன. அந்த வகையில் ஆளும் திமுக காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியிடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்றும் தங்களது கூட்டணி வலுவாக உள்ளது என்றும் கூறி வருகிறது. அதேபோல், மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அதிமுக தேர்தலை சந்திக்க உள்ளது. மறுபுறம் தேமுதிக, பாமக, விஜயின் தவெக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் DMK கூட்டணி விரைவில் உடையும் என்றும் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வர தயாராக உள்ளது என்றும் கூறியது திமுக கூட்டணிக்கும் குழப்பத்தை ஏற்ப்படுத்துவதாக அமைந்தது. அதே நேரம் கடந்த காலங்களில் பாஜக கூட்டணியில் இருந்த மதிமுகவுடன் தான் பாஜக கூட்டணி தொடர்பாக பேசிவருவதாக கூறப்பட்டது.
அதாவது அண்மையில் மாநிலங்களவை எம்.பி.க்களாக திமுக சார்பில் கமல்ஹாசன், வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த முறையும் தனக்கு எம்.பி சீட் கிடைக்கும் என்று காத்திருந்ததகவும ஆனால் திமுக அவருக்கு கொடுக்காமல் கமலுக்கு கொடுத்ததால் வைகோ அப்செட் மோடுக்கு சென்றதாகவம் சொல்லப்பட்டது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாஜக வைகோவிடம் பேசி மதிமுகவை எப்படியாவது தங்கள் கூட்டணிக்கு இழுத்து விட வேண்டும் என்று வேலையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. தனக்கு சீட் கிடைக்காதா கடுப்பில் இருக்கும் வைகோ பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு தயராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அவரது மகன் துரை வைகோ திமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறாது என்பதில் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறுவதற்கு துரைவைகோ முட்டுக்கட்டை போடுவதால் அடுத்த கட்ட முயற்சியகளில் இறங்கியுள்ளாம் பாஜக.





















