மேலும் அறிய
பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்யக் கோரி வழக்கு !
கால்நடைத்துறை இயக்குனர், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு.

மதுரைக் கிளை
பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்வதை கட்டாயமாக அமல்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கக் கோரிய வழக்கு.
போக்குவரத்து செய்வதற்கும் முன்பு 20 முதல் 24 மணி நேரம் தீவனம் நிறுத்தப்பட வேண்டும்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ் முஹம்மது உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்," தமிழக கால்நடை மருத்துவ அமைப்பு வெளியிட்ட ஆய்வின்படி கோழிகளை வெட்டுவதற்கும், போக்குவரத்து செய்வதற்கும் முன்பு 20 முதல் 24 மணி நேரம் தீவனம் நிறுத்தப்பட வேண்டும். இருப்பினும் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் போக்குவரத்து வாகனங்களில் ஏற்றப்படும் கடைசி நிமிடம் வரை பிராய்லர் கோழிகளுக்கு கட்டாயமாக தீவனம் அளித்து அவற்றின் எடையை செயற்கையாக அதிகரிக்கின்றனர். இதனால் அதிக அளவில் கழிவுகள் வெளியேறி கோழிகள் சுகாதாரமற்ற சூழலில் கொண்டுவரப்படும் நிலை இருப்பதால், பொது மக்களின் உடல் நலத்திற்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு
எனவே, பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் 20 முதல் 24 மணி நேரம் தீவன நிறுத்தம் செய்வதை கட்டாயமாக அமல்படுத்துவதை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு, "வழக்கு தொடர்பாக கால்நடைத்துறை இயக்குனர், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















