Hindu Munnani Vs CPIM : நடுரோட்டில் அடிதடி! இந்து முன்னணி vs மார்க்சிஸ்ட்‘’நீயெல்லாம் பேசலாமா?’
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்து முன்னணியினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விலைவாசி உயர்வுக்கு எதிராக தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த பிரச்சாரத்தின் போது முருகன் மாநாடு குறித்து விமர்சனம் செய்ததாக கூறி இந்து முன்னணியினர் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைக்கலப்பு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனையடுத்து இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தாடிக்கொம்பு போலீசார் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த பின்னர் அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.