Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..
மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன அன்று துரைதயாநிதியின் மனைவி ஏன் மருத்துவமனைக்கு அவரை பார்க்க வரவில்லை என்று கேள்விகள் எழுந்த நி நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துரைதயாநிதியின் மனைவி பதிலடி கொடுத்துள்ளாற்.
முன்னாள் மத்திய அமைச்சரும் முதல்வர் மு.க ஸ்டாலினின் சகோதருமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி. தொழில்அதிபராகவும் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான துரை தயாநிதி கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு வேதாந்த், ருத்ர தேவ் என இருமகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி துரை தயாநிதி அழகிரி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திடீரென வீட்டில் மயங்கி சரிந்து விழுந்த அவரை உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதைத்தொடர்ந்து அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத கால சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி அழகிரி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை முக அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். சித்தப்பா ஸ்டாலினும் இருமுறை நேரில் வந்து துரை தயாநிதியை நலம் விசார்த்து சென்றார்.
சிஎம்சி மருத்துவமனையில் ஏ பிளாக்கில் துரை தயாநிதி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலம் தேறிய துரை தயாநிதி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனால் துரைதயாநிதி டிஸ்சார்ஜ் ஆன அன்று அவரது மனைவி அனுஷா மட்டும் ஏன் வரவில்லை என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பபட்டு வந்தது.
இந்த நிலையில் அமெரிக்க சென்றுள்ள துரை தயாநிதி தனது அக்கா அஞ்சுக செல்வியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தனது அக்கா மற்றும் மனைவி அனுஷாவுடன் இந்த புகைப்படத்தை அவரது மனைவி அனுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தனது கணவரின் புகைப்படத்தை துரை தயாநிதி மனைவி பதிவிட்டது, தன்னை குறித்து எழுப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவரின் இந்த பதிவு பதிலடியாக அமைந்ததுள்ளது.