மேலும் அறிய

நிதிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு ஆப்பு? சிராக் பஸ்வான் அதிரடி வியூகம்! சீனுக்கு வரும் பிரசாந்த் கிஷோர்

நிதிஷ் குமாருக்கு ஆப்பு வைக்கும் வகையில் அதிரடி வியூகம் ஒன்றை கையில் எடுத்துள்ளார் சிராக் பஸ்வான். பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைக்க தூது விட்டுள்ளது ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணியில் புயலை கிளப்பி உள்ளது. 

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது மற்றும்  நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரு அணியாகவும் மற்றும் பிரசாந்த் கிஷோர் தனித்தும் போட்டியிடுகின்றனர். இப்படி 3 அணிகள் களமிறங்குவதால் போட்டி சூடுபிடித்துள்ளது. 

இந்தநிலையில் ஆளும் தரப்பு கூட்டணியில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் லோக் ஜனசக்தி ராம்விலாஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. மத்தியில் ஆளும் பாஜக இருவரையும் சமாதானம் செய்து தங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில் தக்க வைத்துவந்தது. ஆனால் இந்த முறை இருவருக்கும் இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் மீண்டும் மோதல் வெடித்து உள்ளதால் என்டிஏ கூட்டணி உடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

பீகாரில் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 122 தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும். இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணில் நிதிஷ்குமார் கட்சியான  ஐக்கிய ஜனதா தளம் 107 தொகுதியிலும், பாஜக 105 தொகுதியிலும் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 31 தொகுதியை சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியவை இடையே பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்க்கு சிராக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தங்களுக்கு குறைந்தது 40 தொகுதிகள் வேண்டும் என்று போர்கொடி தூக்கியுள்ளார்.


தங்களது வலிமைக்கு ஏற்றவாரு தொகுதிகள் தர வில்லை என்றால் என்டிஏ-வை விட்டு விலக தயார் என்று மூத்த தலைவர்கள் கோபமாக பேசி வருகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் பிரசாந்த் கிஷோருடன் கூட கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரே போடாய் போட்டுள்ளனர். மேலும் அரசியலில் நிரந்தர நண்பணும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை பஞ்ச் டயலாக் பேசி வருகின்றனர். இதனால் நிதிஷ்குமார் அப்செட்டாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் கேட்ட தொகுதி கிடைக்காததாலும் மேலும் தனது தந்தை பஸ்வான் மறைவுக்கு பிறகு தங்களது லோக் ஜனசக்தி கட்சியை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என எண்ணிய சிராக் பஸ்வான்  கூட்டணியை விட்டு வெளியேறி தனித்துப்போட்டியிட்டார் . 

அந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிட்ட 110 தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 133 தொகுதியில் நிதிஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை எதிர்த்து களம் கண்டார் சிராக். ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றார். தேர்தலுக்கு பிறகு தனது சொந்த சித்தப்பா பசுபதி குமார் மூலம் கட்சியை உடைக்க நிதிஷ்குமார் திட்டம் தீட்டியதாக பகீர் கிளப்பினார் சிராக். அதேபோல் அவரது சித்தப்பாவும் மற்ற 4 எம்.பி.க்களும் சிராக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் லோக் ஜனசக்தி கட்சி இரண்டாக உடைந்தது. 2021-ல் லோக் ஜனசக்தி கட்சி ராம் விலாஸ் என்ற புதிய கட்சியை உருவாகினார் சிராக் பஸ்வான் மற்றும் அவரது சித்தப்பா ராஷ்ட்ரிய லோக் சமதா என்ற புதிய கட்சியை உருவாக்கினார். இவர்கள் இருவரும் தற்போது பாஜக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 5 தொகுதியில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது சிராக் தலைமையிலான லோக் ஜனசக்தி .இதனால் மூலம் மோடி தலைமையிலான 3.0 அரசாங்கத்தில் மத்திய கேபினட் அமைச்சரானார் சிராக் பஸ்வான். 

நிதிஷ்குமார் வயது மூப்பு காரணமாக அவரால் தீவிரமாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை, இதுவே அவருக்கு கடைசி தேர்தல் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேபோல வரும் காலத்தில் பிரசாந்த் கிஷோர் பீகார் அரசியலில் மிகப்பெரிய தலைவராக உருவெடுப்பார் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.

இதனை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கருத்து கணிப்பில் தேஜஸ்வி யாதவ் முதல் இடத்திலும், பிரஷாந்த் கிஷோர் இரண்டாம் இடமும் பிடித்தனர் அதில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் நிதிஷ்குமார். இது பீகார் அரசியலில் கூர்ந்து கவணிக்கப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்  சிராக் பஸ்வான்,  பிர்ஷாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்தால் அது நிதிஷ்குமாருக்கு அரசியலில் பேரிடியாக அமையும், மேலும் வரும் காலங்கலில் பிரஷாந்த் கிஷோர் முதல்வராக வாய்ப்பு இது உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இதன்மூலம் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி பீகாரில் ஆட்சி அமைக்க வழிவக்கும் என நிதிஷ்குமார் தரப்பு புலம்புகின்றனர்.

இதுபற்றி பாஜக தரப்பில் கூறுகையில் சிராக் எங்கள் கூட்டணியிலே தொடர்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget