ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வரும் ஜூலை 10ஆம் தேதி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார்.
இந்த சூழலில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் களமிறங்குவார்கள்? என்பது பெரும் கேள்வியாக இருந்தது. இதுதொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையின் முடிவில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாக திறனற்ற அராஜக விடியா திமுக ஆட்சியில் நடைபெறும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது
மேலும் தேர்தலை கண்டு அஞ்சுகின்ற பயப்படுகின்ற அச்சப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர் என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பணபலம், படைபலத்துடன்
பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை
கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை
சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டர்கள்
என்பதாலும், தேர்தல் நியாயமாக நடைபெறாது
என்பதாலும் விக்கிரவாண்டி தேர்தலை
அதிமுக புறக்கணிக்கிறது