Money Inflation : 1 லட்சத்தின் மதிப்பு 55,000..பணவீக்கம் என்ன செய்யும்? 10 வருடத்தில்..
இன்னும் 10 வருடத்திற்கு பிறகு ரூ.1 லட்சத்தின் மதிப்பு என்ன என தெரியுமா? செபி வெளியிடும் தகவலின் படி 6% பணவீக்கம் அடிப்படையில 10 வருடத்திற்கு பிறகு இருக்கும் ரூ.1 லட்சத்தின் மதிப்பு ரூ.55,000 தான். இதுக்கு காரணம் பணவீக்கம் என கூறப்படுகிறது.
எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்க இப்போது இருந்தே திட்டமிடுவது அவசியமாகிறது. 1 கோடி ரூபாய் கையில் இருந்தால் எதிர்காலம் கவலையற்றதாக இருக்கும் என்று பலர் நினைக்கலாம். ஆனால், தற்போதுள்ள ரூ.1 கோடிக்கு இருக்கும் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் இருக்காது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் மதிப்பு இப்போது இருப்பதை விட அதிகமாக இருந்தது.அதிகரித்து வரும் பணவீக்கம் காலப்போக்கில் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்து விடுகிறது. இதனால் பணத்தின் மதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
பொருட்களின் விலைவாசி கூடுதல், பொருளியல் வீழ்ச்சியால் பணத்தின் மதிப்பு குறைதல் போன்ற காரணங்களால் ஒரு நாட்டின் நாணயத்தின் வாங்கு திறன் குறையும். ஒரு பொருளை வாங்கத் தேவையான பணத்தின் அளவு அதிகரிக்கும். இது பணவீக்கம் எனப்படுகிறது.நம்ம பணத்தின் மதிப்பு குறைந்து , பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு அதிகமாகிறது என்பது தான் பணவீக்கம். இந்தியாவில் சராசரியாக ஆண்டு பணவீக்கம் 6% என சொல்லப்படுகிறது. உதாரணமாக இந்த ஆண்டு நாம் ஒரு பொருளை ரூ.100க்கு வாங்குகிறோம், என்றால் வருஷத்துக்கு 6% பணவீக்கம் இருந்தால் அது அடுத்த வருடம் அதே பொருள் 106 ரூபாய்க்கு வாங்க வேண்டியது வரும்.
6% பணவீக்கம் அடிப்படையில் இன்றைக்கு ரூ.1 லட்சத்தின் மதிப்பு 10 வருடத்தில் ரூ.55,000மாக குறையும். அதாவது இன்றைக்கு ரூ.1 லட்சத்திற்கு வாங்கும் பொருள் 10 வருடத்திற்கு பிறகு வாங்க ரூ.1.79 லட்சம் தோவைப்படும். இதுவே 20 வருடத்திற்கு பிறகு ரூ.3.21 லட்சம் தேவைப்படும். அதனால் தான் முதலீடு செய்யும் போது பணவீக்கத்துக்கு நிகரான ரிட்டர்ன்ஸ் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
அத்தகைய நேரங்களில் முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை மனதில் வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் பெரிய வருமானத்தைப் பெறக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய வேண்டும்.