Mukesh Ambani: வாரிசை களமிறக்கும் முகேஷ் அம்பானி...கைமாறும் ரிலையன்ஸ் சாம்ராஜ்யம்!
Mukesh Ambani: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார். 2020ஆம் ஆண்டின்படி அவருக்கு 104.7 பில்லியன் சொத்து மதிப்பு எனவும், கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 21.4 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் அவரது வாரிசுகளுக்கு கைமாறுவது குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியானாலும் அதுகுறித்து எந்த கருத்தையும் அவர் கூறாமல் இருந்தார். ஆனால் தற்போது அம்பானி ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை தனது வாரிசுகளிடம் ஒப்படைக்க அவர் தயாராகியிருப்பதை தன் பேச்சில் உணர்த்தினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















