மேலும் அறிய

Rahul Priyanka Wayanad : வயநாட்டில் ராகுல், பிரியங்கா! வாடிய முகத்துடன் பயணம்! நிர்வாகிகளுக்கு ORDER

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக இன்று வயநாடு செல்கின்றனர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270ஐ தாண்டியுள்ளது. இன்னும் 250க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளதால் பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது. மாநில மீட்புக் குழுக்கள் மற்றும் ராணுவம் இணைந்து முழு வீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும், காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று வயநாடு செல்கின்றனர். 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் ராகுல்காந்திக்கு வெற்றியை தேடி கொடுத்தது வயநாடு தொகுதி. 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தாலும் வயநாடு தொகுதி அவரை காப்பாற்றியது. 2024 தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி களமிறங்கவிருக்கிறார். ராகுல்காந்திக்கு வயநாடு தொகுதியுடன் நெருக்கமான உறவு இருப்பதால், பிரியங்கா காந்தியை அந்த தொகுதியில் களமிறக்குகிறார்.

தற்போது வயநாடு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நேரடியாகவே சென்று களப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே வயநாடு செல்ல திட்டமிட்டார் ராகுல். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ராகுல், நானும் பிரியங்காவும் நிச்சயமாக வயநாடு வந்து தேவையான உதவிகளை செய்வோம், அங்கு நிலைமை எப்படி உள்ளது என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் இன்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாடு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடுக்கு செல்லும் ராகுல்காந்தி, பிரியங்கா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். மேலும் கேரள காங்கிரஸ் கட்சியினர் மீட்புப் பணிகளுக்கு உதவ வேண்டும் என்றும், மக்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்றும் ராகுல் ஏற்கனவே உத்தரவு போட்டுள்ளார்.

இந்தியா வீடியோக்கள்

Tirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்
Tirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji:கிடைத்தது ஜாமீன் -471 நாட்களுக்கு பிறகு வெளியே வரும் செந்தில் பாலாஜி - நிபந்தனை என்ன?
கிடைத்தது ஜாமீன் -471 நாட்களுக்கு பிறகு வெளியே வரும் செந்தில் பாலாஜி - நிபந்தனை என்ன?
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Emmanuel Macron : ”ஜனநாயகத்தின் வீரியம்” பிரான்ஸ் அதிபர் தமிழில் பதிவுSavukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji:கிடைத்தது ஜாமீன் -471 நாட்களுக்கு பிறகு வெளியே வரும் செந்தில் பாலாஜி - நிபந்தனை என்ன?
கிடைத்தது ஜாமீன் -471 நாட்களுக்கு பிறகு வெளியே வரும் செந்தில் பாலாஜி - நிபந்தனை என்ன?
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !
Embed widget