PM Modi New Car: Bullet Proof, அணுகுண்டு தகர்க்காது... மோடியின் மெர்சிடஸ் கார் சிறப்பம்சங்கள்
PM Modi New Car: ரேஞ்ச் ரோவர், லேண்ட் குரூசர் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களுடன் பிரதமரின் வீட்டு கார் பார்க்கிங்கில் புத்தம் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக காரும் சமீபத்தில் இணைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி மேபேக் கூலிங் கிளாஸ்களை அணிந்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இன்று அவரிடம் விஷேச பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புத்தம்புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் ஒன்று இருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்த போது ஹைதராபாத் இல்லத்தில் அவரை வரவேற்க பிரதமர் மோடி வந்திருந்த போது மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 காரில் அவர் முதல் முறையாக வந்திருந்தார். சமீபத்தில் அவருடைய இந்த புதிய காரை மீண்டும் பார்க்க முடிந்தது. தனக்கு தேவையான காரை பிரதமர் கேட்டுப்பெறுவதில்லை. அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர், நிலைமைக்கு தகுந்தவாறு, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காரை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படித்தான் இந்த கார் பிரதமருக்காக வங்கப்பட்டுள்ளது. இரண்டு மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக கார்கள் தற்போது பிரதமரின் கான்வாயில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![Saif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash Kanojia](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/27/e4a39270fa6996473e71b83e6d2ec1b31737977920833200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![Congress: Delhi-க்கு படையெடுக்கும் தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/22/c33aead4c054d31c140042af668178f21737562429004200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/22/c4ae07f036f7453b0ffe3a77d018821f1737546103539200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/09/0b3c7e525d9ae8a0ed0c6de757750ca31736408054618200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIA](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/dd2d73833927f427184bdc57180ac61e1736064541574200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)