மேலும் அறிய

Theni neutrino project Details : தேனி ஊரையே அழிக்க பாக்கறாங்க - நியூட்ரினோ அதிரவைக்கும் பின்னணி..

தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள T.புதுக்கோட்டை எனும் மலையடிவார கிராமமான பொட்டிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான இந்த கிராமத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைக்கப்படுகிறது நியூட்ரினோ ஆய்வகத்திட்டம். மலையின் உச்சியிலிருந்து 1.3 கி.மீ கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும் எனவும், இதையடுத்து மலையை குடைந்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி அமைக்கப்படும். இதைச் சுற்றி நான்கு திசைகளிலும் மேலேயும் ,கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான் ஆராய்ச்சி நடத்த முடியும் என்ற நிலையில் அம்பரப்பர் மலையில் உள்ள பெரிய பாறைகள் மூலம்தான் வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து நிறுத்த முடியும். என்ற நிலையில் அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும் எனவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஐ.என்.ஓ., கூடத்தில், காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும். இந்த நியூட்ரினோ திட்டமான அறிவியல் ஆய்வு மையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த டி.புதுக் கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன் பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நியூட்ரினோ எனும் திட்டத்தால் தங்கள் பகுதியில் விவசாயம் அழியும் நிலை ஏற்படும் எனவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் தேனி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனுவாக அளித்துள்ளதாக இப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். அம்பரப்பர் மலையில் அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ 2015 மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது இதனை தொடர்ந்து 2016ல் பூவுலகின் நண்பர்கள் சார்பாக இந்த நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு அறிக்கையை போலியான நிறுவனத்தின் மூலம் வாங்கியதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்ற பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது காட்டு உயிர் அனுமதி கோரி வனத்துறைக்கு நியூட்ரினோ திட்ட ஆய்வுக்குழு சார்பாக டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையிலிருந்து 3.50 கி.லி தண்ணீரை இந்த நியூட்ரினோ திட்டத்திற்க்கு செலவிடுவதும் இதனால் ஏற்கனவே விவசாயத்திற்க்கு போதிய தண்ணீர் இல்லாத நிலையிலும் குடி நீர் பற்றாக்குறையான நிலையிலும் இந்த திட்டத்திற்க்கு இவ்வளவு தண்ணீரை செலவிடுவதால் தண்ணீர் பற்றாக்குறையால் இப்பகுதி மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை என 5 மாவட்டங்களும் கடுமையாக தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வண்டலூரில் சனிக்கிழமை சர்ப்ரைஸ்! கையில் வண்ணத்துப்பூச்சியோடு போட்டோ எடுக்க சூப்பர் வாய்ப்பு – பூங்கா நிர்வாகம் அழைப்பு!
வண்டலூரில் சனிக்கிழமை சர்ப்ரைஸ்! கையில் வண்ணத்துப்பூச்சியோடு போட்டோ எடுக்க சூப்பர் வாய்ப்பு – பூங்கா நிர்வாகம் அழைப்பு!
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்? சென்னை? - வானிலை வார்னிங்
தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்? சென்னை? - வானிலை வார்னிங்
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget