மேலும் அறிய

BJP cadre false complaint : பொய் சொன்ன பாஜக பிரமுகர்! உண்மையை உடைத்த கொள்ளையன்! ஆத்திரத்தில் POLICE

ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாஜக நிர்வாகி போலீசில் பொய் புகார் அளித்த நிலையில், கொள்ளையனிடம் மேற்கொண்ட விசாரணையில் 18.5 லட்சம் மட்டுமே திருடப்பட்டது அம்பலமாகியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவர் இதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று காலை தனது தோட்டத்துக்கு சென்று விட்டு பிற்பகலில் மீண்டும் வீட்டுக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து விஜயகுமார் தன் வீட்டில் வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகள் காணாமல் போனதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவியில் பார்த்த போது, சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் விஜயகுமாரின் வீட்டுக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து சென்றது தெரிய வந்தது. 

இதையடுத்து கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் என்பதும், கருமத்தம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. பாஜக பிரமுகர் விஜயகுமாரின் வீட்டில் பூட்டை உடைத்து 18 புள்ளி 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகளை அன்பரசன் கொள்ளையடித்துச் சென்றதும் வெளிச்சத்துக்கு வந்தது. 

இதுதொடர்பாக பாஜக பிரமுகர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளையர்களை விரைவாக பிடிப்பதற்காக போலீசுக்கு அழுத்தம் தரவே ஒன்றரை கோடி ரூபாய் காணாமல் போனதாக பொய்யான தகவலை தெரிவித்ததாக கூறியுள்ளார். பொய்யான தகவல்களை கூறி போலீசாரை அலைக்கழித்த பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் எஸ்.பி பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
மழையில் தவித்த பார்வையற்றோர்: மதுரையில் ரெயின்கோட் வழங்கிய சமூக ஆர்வலர்!
மழையில் தவித்த பார்வையற்றோர்: மதுரையில் ரெயின்கோட் வழங்கிய சமூக ஆர்வலர்!
ABP Nadu Top 10, 25 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 25 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
மதுரை தீபாவளி ஷாப்பிங்: மழையிலும் மக்கள் ஆர்வம், சாலையோர வியாபாரிகள் கவலை!
மதுரை தீபாவளி ஷாப்பிங்: மழையிலும் மக்கள் ஆர்வம், சாலையோர வியாபாரிகள் கவலை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget