Children gift to Sanitation workers |தூய்மை பணியாளர்களுக்கு giftசிறுவர்கள் நெகிழ்ச்சி செயல்
3ம் வகுப்பு மாணவன் சேர்த்து வைத்த பணத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அளித்த அன்பு பரிசு!.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் -கோவிலூர் சாலை பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் மகன் முகேஷ் மற்றும் அவரது சகோதரன் யோகேஷ் ஆகிய இருவரும் சேர்த்து வைத்த பணத்தில் திருப்பத்தூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சுமார் 150 பேருக்கு சிறிய அளவிலான பாட்டாசு பாக்ஸ்களை வழங்கினர்.
முன்னதாக நகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் உடன் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்து பின்னர் அனைவருக்கும் பாட்டசு பரிசாக வழங்கப்பட்டது. இது குறித்து மாணவன் முகேஷ் கூறுகையில் சாலை சுத்தம் செய்யவர்கள் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் நாங்கள் அவர்களுக்கு சேர்த்து வைத்த பணத்தில் பட்டாசு வாங்கி கொடுத்தோம் நாங்களும் ஹாப்பி அவங்களும் ஹாப்பி... ஹாப்பி தீபாவளி என்று கூறினார்.
சிறு வயதில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு அளிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றிய நிலையில் இந்த ஏற்பாட்டை அவரது தந்தை வெங்கடேசன் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















