TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? என்று உதயநிதிக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்து காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முற்றும் மோதல்:
இந்த விவகாரத்திற்கு பிறகு திமுக-வினருக்கும், தவெக-வினருக்கும் இடையேயான மோதல் இணையத்தில் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் இன்று தவெக அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு பதில் தரும் வகையில் தவெக ஐடி விங் இன்று தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது,
வாய்ச்சவடால் ஆபாசநிதி:
அரசியலாகவும் கருத்தியலாகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்குக் குறையொன்றுமில்லை.
அரசியலாகவும் கருத்தியலாகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்குக் குறையொன்றுமில்லை.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) August 16, 2026
மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக்… pic.twitter.com/hu0anlpljw
மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கிறார் உளறல்நிதி. என்ன சொன்னாலும் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் அறிவில்லாத அறிவாலயத்தார் அல்ல, உருட்டுநிதி!
மிசாவில் கைதானாரா?
பொதுவெளியில் பெண்களை ஆபாசமாகப் பேசும்போது வராத வெட்கம், பெண்களை ஆபாசமாகப் பேசியதால் கைதானேன் என்று சொல்வதில் வருகிறதாம் வெட்கங்கெட்ட ஆபாசநிதிக்கு!
அப்பா மிசாவில் தான் கைதானாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா, ஆபாசநிதி?
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தவெக -வினரும் தற்போது மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானது தொடர்பாக உதயநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக-வினர் தொடர்ந்து ஆபாச விமர்சனங்களை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலரின் ஆபாச பேச்சு வீடியோக்களையும் அதற்கு சான்றாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















