SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!
எஸ்.எஸ்.ஹைதராபாத்தில் பிரியாணி சாப்பிட்டு 35 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.பொண்ணு, பொண்டாட்டி எல்லாம் ஹாஸ்பிடல்ல படுத்து கிடக்குறாங்க, எங்க வயிறுலாம் எரியுது, குடும்பத்துக்கு எதாச்சும் ஆனா யாரு சார் பொறுப்பு?என்று வாடிக்கையாளர்கள் கடையின் முன் ஆவேசத்துடன் முறையிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த திங்கட்கிழமை இரவு, நிஷா என்பவர் பொறித்த சிக்கன் வாங்கியுள்ளார். அதை வீட்டுக்கு கொண்டு சென்று குடும்பத்தினருடன் சாப்பிட்டுள்ளார். மறுநாள் காலை வீட்டில் இருந்த அனைவருக்கும் வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் தனியார் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று பின்னர் தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். 10 வயது, 12 வயது சிறுவன் உட்பட 7 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதே போல அதே பகுதியை சேர்ந்த ராஜூ குடும்பத்தினரும் அந்த கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கும் உடல் உபாதை ஏற்பட்டு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உணவகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் தங்களிடம் புகார் அளிக்க வருமாறு தெரிவித்த நிலையில் கடையை பூட்டவேண்டும் என்று உறவினர்கள் ஆவேசமாக கோரிக்கை வைத்தனர். கடையின் முன் நின்று கத்தி ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர். இதையடுத்து பிரியாணி செய்யும் சமையல் கூடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் ஓட்டலை எப்படி பராமரிக்க வேண்டும்? என்று எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி மேலாளர் அப்துல் சமதுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.