Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்
அதிகமான வெயில், கடும் கூட்ட நெரிசல், போதிய குடிநீர் வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விமான சாகத்தை பார்க்க சென்ற மக்கள் உயிரிழந்ததும், மயங்கி விழுந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லாததால் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.
இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடக்கும் விமான சாகசம் என்பதால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுமார் 15 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் குவிந்ததாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தினருடன் மெரினாவை நோக்கி மக்கள் படையெடுத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படது.
மெரினா காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மக்களால் நடந்துகூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதுவும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசலாலும், வெயிலால் ஏற்பட்ட நீா்ச்சத்து இழப்பு காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. குடிநீர் வசதிக்கான ஏற்பாடுகளும் சரியாக செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிகழ்ச்சி முடிந்து ஒரே நேரத்தில் மக்கள் வெளியேறியதால் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயங்கி விழுந்தவர்களை ஆம்புலன்ஸ்-ல் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் அதிகமாக இருந்ததால் காவல் துறையினர் மக்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். நிகழ்ச்சியை காண மகிழ்ச்சியாக கிளம்பி சென்ற மக்கள் இப்படி ஒரு நிலைக்கு ஆளானது சமூக வலை தளங்களில் விவாதமாக மாறியுள்ளது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான திமுக அரசுக்கு கண்டனங்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.