வந்துவிட்டது வலிமை அப்டேட் - ரசிகர்களுக்கு இன்பச்செய்தி சொன்ன போனி கப்பூர்.!
H. வினோத் இயக்கத்தில் தல அஜித் மற்றும் ஹுமா குரேஷி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வலிமை. பிரபல தயாரிப்பாளர் போனி கப்பூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றார். "சதுரங்க வேட்டை", "தீரன் அதிகாரம் ஒன்று" ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வினோத் பாலிவுட் உலகத்தை கலக்கிய பிங்க் திரைப்படத்தை அஜித் குமார் அவர்களை கொண்டு "நேர்கொண்ட பார்வை" என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்.
இன்றளவும் நேர்கொண்ட பார்வை படத்திற்கான வரவேற்பு குறையவில்லை என்றால் அது மிகையல்ல. "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தையும் போனி கப்பூர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு அந்த திரைப்படம் வெளியான நேரத்தில், தான் மீண்டும் வினோத் - அஜித் கூட்டணியில் அடுத்த படத்தை எடுக்கவிருப்பதாக அப்போதே போனி கப்பூர் அறிவித்தார்.
அந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில் "வலிமை" படத்திற்கான Pre Production பணிகள் தொடங்கின. ஏறத்தாழ 2 ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இறுதியாக ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நாள் தற்போது வந்துவிட்டது. வலிமை படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கப்பூர் தற்போது வெளியிட்டுள்ளார். மே 1ம் தேதி அஜித் அவர்களின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் "First Look" மற்றும் அப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.