ஹன்சிகாவுக்கு விவாகரத்து?உண்மையை உடைத்த கணவர் இதுதான் காரணம்? | Sohael Khaturiya | Hansika Motwani Marriage | Tamil Cinema
ஹன்சிகா திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.இந்தநிலை விரைவில் விவாகரத்து வாங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் சிம்பு, விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த ஹன்சிகா மும்பையை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் குடும்ப நண்பரான சோஹேல் கத்துரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தன.
இந்தநிலையில் திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் நடிகை ஹன்சிகா மோத்வானி- சோஹேல் கதுரியா திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில், நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கன் நான்சி குடும்ப வன்முறை புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், நடிகை ஹன்சிகாவும், முஸ்கான் நான்சிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். இந்நிலையில், நடிகை ஹன்சிகாவும், முஸ்கான் நான்சிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.. என் திருமண வாழ்க்கையில் அவர் தலையிட்டு தன் கணவருடனான உறவைச் சீர்குலைத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் ஹன்சிகா கடந்த சிலமாதங்களாகத் தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஹன்சிகா விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஹன்சிகா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் ஹன்சிகா கணவரிடம் விவாகரத்து நடந்ததா எனவும் கேள்வி எழுப்பியதற்கு விவாகரத்து நடந்ததாக வந்த தகவல் உண்மையில்லை என தெரிவித்திருக்கிறார் சோஹல் கதூரியா. இதன் மூலம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வெளியான ஹன்சிகா சோஹல் கதூரியா விவாகரத்து விவகாரம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் ஹன்சிகா ஹன்சிகா தனது கணவருடன் எடுத்த குறிப்பிட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.