Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக

வரும் சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் திருக்கோவிலூர் தொகுதியை விட்டுவிட்டு விக்கிரவாண்டியில் போட்டியிட பொன்முடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் எம் எல் ஏ லட்சுமணனை அடுத்து விக்கிரவாண்டி எம் எல் ஏ அன்னியூர் சிவாவும் பொன்முடி மீது கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் கடும் அதிருப்திக்கு ஆளாகி சைலண்ட் மோடில் இருந்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார் பொன்முடி. இம்முறை வெற்றி கண்டே தீர வேண்டும் இல்லையெனில் தன்னை ஒரேடியாக கட்சியில் ஓரங்கட்டி விடுவார்கள் என்ற அச்சம் பொன்முடிக்கு உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். 

ஆனால் இம்முறை திமுக எடுத்த ரகசிய சர்வேயில் திருக்கோவிலூர் திமுக சாதகமாக இல்லை என்ற ரிசல்ட் வந்துள்ளது. இதனையடுத்து வேறு தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் அவர் விக்கிரவாண்டியை தேர்ந்தெடுத்துள்ளது மீண்டும் விழுப்புரம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2021 தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக எம் எல் ஏ புகழேந்தி மறைவை அடுத்து கடந்த ஜூலை 2024 ல் அங்கு அன்னியூர் சிவா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் பொன்முடி அந்த தொகுதியை சிவாவிடம் இருந்து பறித்து தன்வசப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் முன்னோட்டமாக தற்போதே திருக்கோவிலூர் நிர்வாகிகளை அழைத்து விருந்து வைத்துள்ளாராம் பொன்முடி.

ஏற்கனவே விழுப்புரம் எம் எல் ஏ லட்சுமணனுக்கும் பொன்முடிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் அன்னியூர் சிவாவும் பொன்முடி மீது அதிருப்தியில் உள்ளது விழுப்புரம் திமுகவை ஆட்டம் காண வைத்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

அதே நேரத்தில் பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் பதவியை இழந்த பொன்முடிக்கு இன்னும் கனிமொழி உள்ளிட்ட பெண் தலைகளுக்கு கோபம் தீரவில்லை என கூறப்படுகிறது. இதன் விளைவால் வரும் தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்காமலும் போகலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola