Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த டிக் டாக் பிரபலம் இலக்கியா தற்கொலைக்கு முயன்றார் என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எல்லாம் பொய் என்று இலக்கியாவே விளக்கம் அளித்துள்ளார்.


டிக் டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. சமூக வலைதளம் மூலம் பிரபலமான இவர் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சமையல் குறிப்பு, உடல் நலம் தொடர்பான டிப்ஸ் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார். அதோடு தனது பயணங்கள் தொடர்பான வீடியோக்களையும் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இச்சூழலில் தன் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு காரணம் பிரபல ஸ்டெண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் என்றும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பரவியது, இலாக்கியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின்  பெயரில் பரவிய அந்த புகைப்படத்தில், ”என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன்.  நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்”என்று கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் இலக்கியாவிற்கு என்னாச்சு என்று கேள்வி எழுப்பிய நிலையில், எல்லாமே பொய் என்று இலக்கியா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola