MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று மாலை வீடு திரும்பிய நிலையில், அதிகாலையில் அவரது வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 21 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்திலும் உடல்நலம் சீராக உள்ளதாக அறிக்கைகள் வெளியாகின.
அதே சமயம் மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் முக ஸ்டாலின் காணொலி வாயிலாக களப்பணிகளை மேற்கொண்டார். மேலும் நேற்று திமுக மண்டல தலைவர்களை மருத்துவமனைக்கே அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகின. மேலும் ஓய்வெடுக்க மனமில்லை என்ற முதல்வரின் குறிப்பும் கவனம் பெற்றது.
இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக நேற்று முதல் தகவல்கள் வரத்தொடங்கின. இதனையடுத்து இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் முதல்வரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு பாதுகாப்புத் தீவிரமாகப் பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டு பத்திரமாக வீடு திரும்பியுள்ளார்.