Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு

மதுரை மாநகராட்சி 200 கோடி வரி முறைகேடு புகாரை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அதிமுக மற்றும் திமுகவினரிடையே கடும் தள்ளுமுள்ளி ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவு வரி முறைகேடு நடைபெற்றது தொடர்பாக எழுந்த புகாரின் கீழ் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிசெல்வி, முகேஷ்சர்மா,சுவிதா ஆகிய 5 மண்டல தலைவர்கள் மற்றும் வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி, நகரமைப்பு குழு தலைவர் ஜெ.மூவேந்திரன் ஆகிய 7 பேர் ராஜினாமா செய்தனர். முறைகேடு தொடர்பாக மாநகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், முன்னாள் உதவி ஆணையர் மற்றும் ஏஜெண்டுகள் உள்ளிட்டோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக உயர்நீதிமன்ற உத்தரவுபடி மதுரை சரக டிஜிபி அபினவ்குமார் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. வரி முறைகேட்டை கண்டித்து பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்திய நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு கேள்விக்குறியானது. இந்த பரபரப்புக்கிடையே இன்று மதுரை மாநகராட்சியின் 41ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இந்த மாமன்ற கூட்டத்தின் போது வரி முறைகேடு தொடர்பாக அதிமுகவினார் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola