பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj

குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி இருக்கும்போதே விவாகரத்து கூட வாங்காமல் இன்னொரு திருமணம் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

நடிகராக மெஹந்தி சர்கஸ் திரைப்படம் மூலம் மக்களால் அறியப்பட்டாலும், தனது சமையல் கலையால் குக் வித் கோமாளியில் நடுவராக செயல்பட்டு வெகுஜன மக்களை சென்றடைந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்நிலையில், அண்மையில் இவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிஸில்டாவை திருமணம் செய்தார். இவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. பிரதமர் மோடி தொடங்கி நாட்டின் பல முக்கிய நட்சத்திரங்களுக்கு விருப்பமான உணவுகளை சமைத்து கொடுத்த, ரங்கராஜின் புதிய வாழ்க்கை பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு இடையே கருத்து வேற்பாடு ஏற்பட்ட நிலையில், ரங்கராஜ் உடன் ஜாயிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வந்த காதலர் தினத்தை இருவரும் சேர்ந்து கொண்டாடும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டதோடு, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பெயரை ஜாய் ரங்கராஜ் என்றும் அவர் பெயரை மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் எளிய முறையில் நெருங்கிய உறவினர்களை மட்டும் கொண்டு, கோயிலில் ஜாய் மற்றும் ரங்கராஜின் திருமணம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக ஜாய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தற்போது தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக்வும்” அறிவித்துள்ளார்ட்ர்.

ஆனாலும், முதல் மனைவியான ஸ்ருதி இன்னும் தனது பெயரை ஸ்ருதி ரங்கராஜ் என்ரே அதிகாரப்பூர்வ கணக்குகளில் பயன்படுத்தி வருகிறார். அவர்கள் இடையேயான விவாகரத்து இன்னும் சட்டப்பூர்வமாக உறுதியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola