Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில்  விசிக மாவட்ட செயலாளர் காரை ஆம்புலன்ஸ் செல்லும் வழிப்பாதையில் செல்ல சுங்கசாவடி ஊழியர் அனுமதிக்காததால் ஏற்பட்ட சண்டையில் கைகலப்பாக  சுங்கச்சாவடி பூத் மற்றும் அலுவலக கண்ணாடியை விசிகவினர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த மயிலம் மாவட்ட செயலாளராக உள்ள திலீபன் மற்றும் மயிலம் ஒன்றிய செயலாளர் கார்மேகம் ஆகிய இருவரும் மயிலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி காரில் வந்துள்ளனர். விக்கிரவாண்டி சுங்கசாவடி அருகே வந்தபோது ஆம்புலன்ஸ் செல்லும் வழியாக சுங்கசாவடியை விசிகவினர் கடக்க முயன்றுள்ளனர். 

அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் அனுப்ப இயலாது என காரினை மறித்துள்ளனர்.

இதனையடுத்து காரிலிருந்து இறங்கி ஊழியர் தினேஷிடம் மாவட்ட செயலாளர் காரை அனுப்பமாட்டியா என  வாக்குவாதம் செய்துள்ளனர்.

 இந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறி ஒன்றிய செயலாளர் கார்மேகமும் சுங்கசாவடி ஊழியர் தினேஷ் குமார் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். சண்டையிட்டவர்களை சுங்கச்டாவடி ஊழியர்களும், வாகன ஓட்டிகளும் விலக்கி விட்ட பின்னர் விசிக நிர்வாகிகள் 30 க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடிக்கு வந்து ஊழியர்களுடன் சண்டையிட்டு சுங்கச்சாவடி  அலுவலக கண்ணாடி மற்றும் சுங்கசாவடி பூத் கண்ணாடியை உடைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரனை செய்து சுங்கச்சாவடி கண்ணாடியை உடைத்த விசிகவினரை கைது செய்ய முற்பட்டபோது விசிகனர் சுங்கசாவடியில் மறியலில் ஈடுபட முயன்றனர். அதனை தொடர்ந்து ஏ டி எஸ் பி தினகரன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் கலைந்து செல்லாம் வாக்குவாதம் செய்ததால் விசிகவினை போலீசார் கைது செய்தனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola