தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!

மருத்துவமனையில் இருந்து கொண்டே பிரதமர் மோடியிடம் கொடுக்க வேண்டிய கோரிக்கை மனுவை தலைமை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ சோதனையில் உடல்நிலை இயல்பாக இருப்பது தெரியவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து கொண்டே பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகாமில் மனு அளிக்க வந்த பயனாளிகளிடமும் பேசி விவரங்களை கேட்டறிந்தார்.

இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்து கொண்டே பிரதமர் மோடியிடம் கொடுப்பதற்கான கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார். முதலமைச்சர் மருத்துவமனையில் இருப்பதால் பிரதமரை நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனையில் இருந்து கொண்டே, பிரதமரிடம் கொடுப்பதற்கான கோரிக்கை மனுவை தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளார் ஸ்டாலின். இந்த மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ளார்.  இதுமட்டுமல்லாமல் எம்.பி கனிமொழியும் முதலமைச்சரை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். அதற்காக பிரதமர் தூத்துக்குடி வரவிருப்பதால் எம்.பி கனிமொழி முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola