வள்ளியம்மா பேராண்டி - Enjoy எஞ்சாமி
வள்ளியம்மா பேராண்டி -Enjoy எஞ்சாமி
என்ஜாய் எஞ்சாமி !
கடந்த ஒரு வாரமாக அனைவரின் விருப்பப் பாடலாக அமைந்த பாடல் என்ஜாய் எஞ்சாமி ! ரவுடி பேபி புகழ் தி , பாடல் ஆசிரியர் மற்றும் ராப் பாடகர் அறிவு இந்தப் பாடலை பாடியுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் . எஞ்சாமி பாடலை மாஜா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பாடல் வெளியாகி சில நாட்களிலேயே இணையத்தில் வைரலாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்றப் பாடல் என்ஜாய் எஞ்சாமி ! பாடல் அமைந்த விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . அழிந்து வரும், காடுகள், தாவரங்கள், கிளிகள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் நிறைந்த வெப்பமண்டல காடுகளை இந்த வரிகள் உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்து உள்ளது .
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக் குடி.
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி ..
பாடல் ஆசிரியர் அறிவு தனது பாட்டி வள்ளியம்மாவின் அனுபவங்கள் மற்றும் அவரின் சிறுவயது நியாபகங்களை வைத்து இந்த பாடலை எழுதியுள்ளார். நாட்டுப்புற இசை மற்றும் ராப் கலந்த காம்போவாக இந்த பாடல் வெளியாகியுள்ளது .
ஏ .ஆர் .ரகுமானின் மாஜ்ஜா நிறுவனம் வளர்ந்து வரும் பாடகர்களுக்கு இது போன்ற மேடை அமைத்து தருவது வரவேற்கத்தக்கது. இன்னும் இது போன்ற வைரல் பாடல்களுக்காக காத்திருப்போம் .